தனியார் பொறுப்புக் காப்பீடு

ஒவ்வொரு வளர்ந்தோரும் ஒரு தனியார் பொறுப்புக் காப்பீடு செய்யவேண்டும். ஒருவர் மற்றவருக்குத் தவறுதலாகச் சேதத்தை ஏற்படுத்தினால் சேதம் விளைவித்தவருடைய காப்பீடு செலவைப் பொறுப்பெடுக்கும்.

சொந்தப் பொறுப்பு

ஒருவர் மற்றவரைக் காயப்படுத்தினாலோ அல்லது மற்றவர் பொருட்களைச் சேதப்படுத்தினாலோ அதற்குரிய செலவுகளுக்கு அவரே பொறுப்பாகும். சேதங்கள் தவறுதலாக நடந்தாலும் கூட ஒரே நியதி தான். இந்தச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும். உதாரணத்திற்குப் பனிச்சறுக்கலின் போது யாரையாவது காயப்படுத்தினால் இநதச் சேதம் 100 ஆயிரம் பிராங்குகள்வரை இருக்கும்.

தனியார் பொறுப்புக் காப்பீடு

ஒரு இழப்பு ஏற்படும் போது எதிர்கொள்ள வேண்டிய நிதி நெருக்கடியிலிருந்து தப்புவதற்கு தனியார் பொறுப்புக் காப்பீடு (Privathaftversicherung) செய்திருப்பது புத்திசாலித்தனம். இது அதிகமாகத் தனிப்பட்ட காப்புறுதி வசதிகளுக்குள் வரும். தனியார் பொறுப்புக் காப்பீடு பொதுவாக ஒரு வீட்டில் வாழும் அனைவருக்கும் ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும். இந்தக் காப்பீடு கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியது என்றில்லை. ஆனாலும் செய்வது நல்லது எனப் பரிந்துரை செய்யப்படுகிறது.

காப்பீட்டுச் சேவைகள்

தனியார் பொறுப்புக் காப்பீடு காப்பீடு செய்தவரால் ஏற்படுத்தப்படும்; பொருட்கள் மனிதருக்குரிய சேதங்களின் செலவுகளைப் பொறுப்பெடுக்கும். அதன் கீழ் திருத்துவதற்குரிய செலவுகள் சுகமடையும் செலவுகள் சம்பள இழப்பு இழப்பீடு அல்லது வலிக்குரிய பணம் என்பன அடங்கும். தனியார் பொறுப்புக் காப்பீடு வீட்டு மிருகங்களால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கும் பொறுப்பெடுக்கும். ஒரே வீட்டில் வசிப்பவர்களால் சேதம் விளையுமானால் காப்பீடு பொறுப்பெடுக்காது. சேதங்களை வேண்டுமென்றோ அன்றி முரட்டுத்தனமாக ஏற்படுத்தினாலோ காப்பீடு பொறுப்பெடுக்காது.