துவிச்சக்கர வண்டி / நடத்தல்

அறோ மாநிலத்தில் அமைக்கப்பட்ட வலைப்பின்னல் போன்ற துவிச்சக்கர வண்டிப் பாதைகள் மிகவும் வசதியானவை. அதிகமான தொழில்புரிவோர் துவிச்சக்கர வண்டியிலேயே வேலைக்குச் செல்லுகின்றனர். பாதசாரிகளுக்கும் மலையேறுபவர்களுக்கும் தனிப்பட்ட பாதையுள்ளது.

துவிச்சக்கர வண்டியிலோ (Velo) அல்லது நடந்தோ வெளியே செல்லுதல்

அறோ நகரமும் கிராமசபைகளும் துவிச்சக்கர வண்டியோடிகளுக்கும் நடப்பவர்களுக்கும் கவர்ச்சியானதும் பாதுகாப்பானதுமாகும். இதனாலேயே குறைந்த தூரங்களுக்கு அதிகமானோர் காரைத் தவிர்க்கின்றனர். அதிகமான இடங்களில் விசேட துவிச்சக்கரவண்டிப்பாதைகளும் ஒற்றையடிப்பாதைகளும் உள்ளன. பாதசாரிகளுக்கென மஞ்சள் கோடுகளும் அதில் பாதசாரிகளுக்கு வாகனங்களைவிட எப்போதும் முன்னுரிமை (வீதியைக் கடக்கும் போது சமிஞ்சை விளக்கு இல்லாவிடின்) அறோ மாநிலத்தில் அதிகமான அழகான நடை பாதைகளும் - மலையேறும் பாதைகளும் உங்கள் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தக்கூடிய மாதிரி உள்ளன. மலையேறும் பாதைகள் மஞ்சள் நிற வழிகாட்டிகளால் குறிக்கப்பட்டீருக்கும்.

துவிச்சக்கரவண்டியோட்டிகளுக்குரிய விதிகள்

சுவிஸில் துவிச்சக்கர வண்டியோடிகளுக்குப் பரீட்சையோ அன்றி விசேட அடையாள அட்டையோ கிடையாது. வாகனச்சாரதிகளுக்குரிய அதே பொதுவான போக்குவரத்து விதிகளே இருக்கும். தனியான துவிச்சக்கர வண்டிப்பாதைகள் இருப்பின் அதையே பாவிக்கவேண்டும். துவிச்சக்கரவண்டி ஓடக்கூடிய நிலையிலிருக்க வேண்டும். (இரு நல்ல பிறேக்குகள் பெல் முன்னும் பின்னும் பிரதிபலிப்பான்கள் பெடலுக்கு முன்னும் பின்னும் லைற் என்பன. தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனாலும் அணிவது நல்லது. துவிச்சக்கர வண்டியோட்டிகள் ஒரு தனியார் பொறுப்புக் காப்பீடு செய்திருந்தால் ஏதாவது சேதங்கள் ஏற்பட்டால் (ஆட்கள் பொருட்கள் ) காப்பீடு பொறுப்பெடுக்கும்.

துவிச்சக்கர வண்டி பழகுதல்

துவிச்சக்கர வண்டி ஓட விரும்புபவர்கள் முதலில் ஒரு வகுப்புக்குப் போகவேண்டும். இந்த வகுப்புகள் மாநிலத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் துவிச்சக்கரவண்டிக் கழகங்களில் (Pro Velo) நடக்கும். வெளி நாட்டவர்களுக்கென சில கிராமசபைகளில் விசேட வகுப்பு நடைபெறும். பாவித்த மலிவான துவிச்சக்கர வண்டிகளை துவிச்சக்கர வண்டிச் சந்தைகளில் (Velobörsen) இல் வாங்கலாம்.

துவிச்சக்கரவண்டியை எடுத்துச்செல்லுதல்

துவிச்சக்கர வண்டியை புகையிரதத்திலோ அன்றி பஸ்சிலோ எடுத்துச் செல்ல விசேட பிரயாணச்சீட்டு எடுக்கவேண்டும். எப்போதும் எங்கேயும் துவிச்சக்கர வண்டியை எடுத்துச்செல்லலாம். சிலவேளை இடத்தை முற்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும்.