பங்கேற்பு

பல முதியவர்கள் சமூக வாழ்வில் தீவிரமாக பங்கேற்க விரும்புகிறார்கள். ஆர்காவ் மாநிலம் சமூக தொடர்பு, மேற்கல்வி மற்றும் தன்னார்வத் தொண்டுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இது சமூக தொடர்புகளைப் பராமரிக்கவும் சமூகத்திற்கு பங்களிக்கவும் உதவும்.

படிப்புகள் மற்றும் நிகழ்வுகள்

மூத்த குடிமக்களுக்கும், மற்ற அனைத்து வயதினருக்கும் பல்வேறு படிப்புகள் மற்றும் நிகழ்வுகள் உள்ளன. இந்தப் படிப்புகள் உள்ளூர் சமூகங்கள், நகராட்சி மற்றும் ப்ரோ செனெக்ட்டுட்டே ஆர்காவ் (Pro Senectute Aargau), மிக்ரோஸ் க்ளுப் ஷு லே (Migros Klubschule) மற்றும் வயது வந்தோர் கல்வி மையங்கள் (Volkshochschulen) போன்ற பெரிய வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.

ஆர்காவ் மாநிலம் புலம்பெயர்ந்தோருக்கான சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு திட்டங்களை ஊக்குவிக்கிறது. இந்த திட்டங்களில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

தன்னார்வலர்

பல மூத்த குடிமக்கள் சங்கங்கள் அல்லது பிற அமைப்புகள் மற்றும் திட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சமூகம் அல்லது பிராந்தியத்தில் உள்ள சங்கங்கள் மற்றும் அமைப்புகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். பெனவோல் சிறப்பு அலுவலகம் ஆர்காவ் மாநிலம் முழுவதும் தன்னார்வ நடவடிக்கைகளை ஆதரித்து ஏற்பாடு செய்கிறது.

தனிமை

மக்கள் தனிமையாக உணரலாம் அல்லது சமூகத்தில் இனி பங்கேற்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், உதவியை நாடுவது முக்கியம். மக்கள் இலவச ஆதரவைப் பெறக்கூடிய பெயர் குறிப்பிடப்படாத அனாமதேய ஆலோசனை மையங்கள் உள்ளன. உங்கள் குடும்ப மருத்துவரும் உதவ முடியும்.