அரசியல் அமைப்பு

சுவிஸ் அரசியல் நிலை 3 தலைப்புகளாக இருக்கின்றன: மத்தியஅரசு, மாநிலம் (உறுப்பினர் மாநிலங்கள்) மற்றும் கிராமசபைகள். சுவிஸ்பிரசைகள் தமது அரசியல் நிலைகளை வாக்களிப்தன் மூலம் தீர்மானிப்பர்.

சுவிஸ் மத்திய அரசு

சுவிஸ் இணைந்தநாடானது 1848 ஆண்டிலிருந்துள்ளது. தலைநகரம் பேர்ண். சுவிஸ் இனரீதியாக, மொழி மற்றும் சமயரீதியாக ஒன்றையே கொண்டிருக்கவில்லை. வேவ்வேறு கலாச்சாரங்கள் சுயாதீனமாக பிணைந்திருப்பதன் காரணமாக "விருப்பமான தேசியம்" (Willensnation) ஆக கூறப்படுகிறது. சுவிஸ் சர்வதேச அரசியல் ரீதியாக நடுநிலையைப்பேணி வருகிறது.

கூட்டாட்சித்தத்துதுவம்

சுவிஸ் மாநிலங்கள் மற்றும் கிராமசபைகள் என்பன பெரும்பாலும் சுயாதீனமானவை, இதை ஒரு கூட்டாட்சித்தத்துவம் எனலாம். 26 மாநிலங்கள் மற்றும் 2000ற்கு மேற்பட்ட கிராமசபைகள் என்பன முற்றாக அரசின் சட்டதிட்டங்களுட்பட்டவையாக உள்ளன. அறோ மாநிலம் சொந்தமான அரசியல்அடிப்படையையும் அரசையும், ஒரு பாராளுமன்றத்தையும் ஒரு நீதிமன்றத்தையும் கொண்டிருக்கின்றது. பெரும்பாலான அரசின் நடைமுறைகளுக்கு மாநிலம் அல்லது கிராமசபையே பொறுப்பாயுள்ளன. இதனால் உதாரணமாக பாடசாலை நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சட்டங்கள் நாடு முழுவதற்கும் செல்லுபடியாகும்போது, மாநிலத்தால் உருவாக்கப்படும் சட்டம் அம்மாநில பிரதேசத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு செயற்பாடுகளும் மாநிலம், கிராமசபை மற்றும் மத்திய அரசையும் தொடர்புபடுத்துவதாகவே இருக்கும்.

அதிகாரப்பிரிப்பு

அதிகாரம் குவிவதை தடுக்குமுகமாக அரசானது சுவிஸ் மற்றும் மாநிலங்களில் மூன்று சுயாதீனமான தெரிவுகளை பிரித்துவைத்துள்ளது : சட்டத்தை உருவாக்குபவர் தெரிவு, சட்டத்தை நிர்வகிப்பவர் தெரிவு, மற்றும் நீதித்துறைத்தெரிவு. அறோ மாநிலத்தில் பின்வரும் நிர்வாகங்கள் இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றன:

  • சட்டமன்றம்: மேல்சபை (Grosser Rat) (140 அங்கத்தவர், 4 வருடங்களுக்கொரு முறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்
  • நிறைவேற்றல்சபை: ஆளுனர் சபை (Regierungsrat) (5 அங்கத்தவர், 4 வருடங்களுக்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்)
  • நீதிச்சபை: மாநில மற்றும் பிரதேச ரீதியாக உள்ள வேறுவேறான நீதிமன்றங்கள்.

அத்துடன் கிராமசபைகளிலும் சட்டசபைகள் (கிராமசபைக்கூட்டங்கள் அல்லது பாராளுமன்றம், (Gemeindeversammlung, Parlament), மற்றும் ஒரு நிர்வாகி (நகரபிதா அல்லது கிராமசபைபிரதிநிதி, Stadtrat, Gemeinderat) என்பன காணப்படுகின்றன. மத்திய நிர்வாக ரீதியில் சட்டமன்றம் 2 சபைகளை கொண்டுள்ளது: தேசிய மற்றம் நிர்வாகப்பிரதிநிதிகள் (National- und Ständerat). தேசிய அரசு (7 அங்கத்தவர்கள்) என்பது மத்திய அமைச்சர்கள் (Bundesrat). அத்துடன் தேசியரீதியிலும் வேறுவேறான நீதிமன்றங்கள் உள்ளன. உச்சநீதிமன்றமானது மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பதுடன் உதாரணமாக மாநில நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மீளாய்வுக்கு தொடர்ந்து ஆராய அனுப்பக்கூடியதாக இருக்கிறது.

ஜனநாயக உரிமைகள்

சுவிஸ் பிரஜைகள் தெரிவு - மற்றும் வாக்களிப்புக்கு தகுதி பெற்றவர்களாயுள்ளனர். அவர்கள் கிராமசபை, மாநில மற்றும் தேசிய மட்டத்தில் அரசியல் தீர்மானங்களை தெரிவு செய்யவும் அத்துடன் தாமாகவே தெரிவு செய்வதற்காக முன்வைக்கவும் முடியும். அத்துடன் பிரசைகள் கிராம, மாநில மற்றம் தேசிய ரீதியான அரசியல் நடைமுறைகளை தெரிவு செய்யமுடியும்.(நேரடியான உரிமை). சர்வசபை வாக்கெடுப்பு மூலம் மக்களால் தமது சொந்த விருப்புகளை வாக்கெடுப்புக்கு உள்ளாக்கலாம். அறோ மாநிலத்தில் வாழும் வெளிநாட்டினருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அவர்கள் தமது அரசியல் விருப்புகளை வேண்டுகோள் மூலம் நிர்வாகங்களிடம் சமர்ப்பிக்கலாம்.

அடிப்படை உரிமை

அதிகூடிய அடிப்படைச்சட்டக் கொள்கைகள் சுவிஸின் கூட்டாட்சி அரசியலமைப்பில் (Bundesverfassung) உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சி அரசியியலமைப்பின் ஒரு முக்கியமானதாக ஐரோப்பிய மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் (EMRK) எடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அமைகின்றன. இவை மனிதனின் இருப்புகளைப் (உதாரணத்திற்கு வாழ்க்கைக்கான உரிமை, அவசர நிலையில் உதவிக்கான உரிமை) பாதுகாப்பதுடன் மற்றும் தனிப்பட்டவர்களுக்கெதிரான அரச வன்முறை அல்லது பெரும்பான்மையோருக்கு எதிரான குழுக்களின் வன்முறைகள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கிறது. எவருக்கும் அவர்களின் பிறப்பிடம், இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் போக்கிற்குப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்கிறது .அறோ மாநிலத்தில் இனப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. சுவிஸில் சமயம், கருத்து வெளியிடுதல், மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளன.