குறைந்த பணத்துடன் சீவித்தல்

சுவிஸில் வாழ்க்கைச் செலவு கூட. அதனால் சில பொருட்களை பாவித்த பொருட்களாக வாங்கிப் பாவிப்பது பிரயோசனப்படும். பணத் தட்டுப்பாடு உள்ளவர்கள் சில விசேட கடைகளில் மலிவாக வாங்கலாம்.

பாவித்த பொருட்கள்

சுவிஸில் பல பாவித்த பொருட்களின் கடைகள் (Brockenhäuser) உள்ளன. அங்கு பாவித்த பொருட்களை மிகவும் மலிவு விலையில் வாங்கலாம். விசேட சந்தைகளிலும் சில தனிப்பட்ட நபர்கள் பாவித்த பொருட்களை விற்பார்கள் உ+மாக பழைய பொருட்கள் கடை, உடுப்புக்கடை, பனிச்சறுக்கு பொருட்கள் கடை போன்றன.. அதை விட இணைய மூலமும் பாவித்த பொருட்கள் விற்றல் வாங்குதலும் மிகவும் விருப்பத்தக்கதாக உள்ளன.

விளையாட்டு ஃ கலாச்சாரம்ஃகல்வி

Kulturlegi உடன் - வருமானம் குறைந்தவர்களுக்கு கிடைக்கும் இந்த அடையாள அட்டையுடன் விளையாட்டு - கலாச்சார - கல்வி நிகழ்ச்சிகளில் குறைந்த செலவில் பங்குபற்றலாம். இந்த அடையாள அட்டைக்கு கரித்தாஸில் விண்ணப்பிக்கலாம். கரித்தாஸ் விண்ணப்பத்தைப் பரிசோதித்த பின்பு முரடவரசடநபi பெறத் தகுதியுள்ளவரா என்பதை அறிவிக்கும்.

கரித்தாஸ் சந்தை

பணக்கஸ்டமுள்ளவர்கள் கரித்தாஸ் கடையில் (Caritas Markt) உணவு மற்றும் தினசரிப்பாவனைப் பொருட்களையும் மலிவான விலைக்கு வாங்கலாம். இதற்குத் தேவையான பிரத்தியேக அட்டையை கரித்தாஸிலேயே விண்ணப்பித்தால் அதைப் பரிசோதித்த பின்பு இந்த அட்டையைப் பெறத் தகுதியுள்ளவரா என அறிவிப்பார்கள் . இந்தப் பிராந்தியத்தில் Baden, Brugg இலும் இக் கடைகள் உள்ளன. மேலும் அறோ கரித்தாஸ் கடையில்; இந்தப் பிரத்தியேக அட்டையில்லாமல் பாவித்த உடுப்புகள் வாங்கலாம்.

அரசாங்க உதவிகள்

குறைந்த வருமானத்துடன் சீவிப்பவர்கள் பல அரசாங்க உதவிகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள். உதாரணத்திற்கு மருத்துவக் காப்புறுதிக் குறைப்பு , பெற்றோர் தரும் உதவித்தொகை அல்லது ஒரு மேற்பயிற்சிக்காக விண்ணப்பித்துப் பெறும் கல்வி உதவி நிதி என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்களுக்கு சமூகக்காப்புறுதிகள் அல்லது சமூக உதவித்தொகையும் கிடைக்கும்.