மதம்

சுவிஸ் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ நாடு. ஆயினும் இன்று பல வேறு மதங்களைச் சேர்ந்த அதிக மக்கள் சுவிஸில் வாழுகிறார்கள். மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப் பட்டிருப்பதுடன் அரச பாடசாலைகள் மதச் சார்பற்றவை.

மதமும் அரசும்

சுவிஸ் பாரம்பரியமான கிறிஸ்தவ நாடாகும். மாநிலங்களே மதம் மற்றும் மாநிலத்திற்கான தொடர்புகளை தீர்மானிக்கும். பெரும்பாலான டொச் மாநிலங்கள், அறோ மாநிலம் உட்பட,- கிறிஸ்தவ சமயகூட்டமைப்பை பகிரங்க சட்டபூர்வ நிறுவனங்களாக (தேவாலயங்கள், Landeskirchen) அங்கீகரத்துள்ளன. இதன் கருத்து மாநிலம் இவற்றிற்கு குறிப்பிட்ட உரிமைகளைக் கொடுத்துள்ளது. இதன்மூலம் உதாரணமாக தமது அங்கத்தவரிடமிருந்துவரியைப் பெற்றுக்கொள்ளலாம். அறோ மாநிலத்தில் றோமன் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மற்றும் கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன.

அறோ மாநிலத்தில் மத சமூகங்கள்

அறோ மாநிலத்தில் பொதுவான சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மதத்தைத் (தேவாலயங்கள் ) தவிர மேலும் பல மதச் சமூகங்கள் உள்ளன. பெரும்பாலான அறோ மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் மக்களின் தொகை அதிகரித்து வருகிறது. மொத்த குடியிருப்பாளர்களில் 1/5 வீதமான மக்கள் எவ்வித மத நம்பிக்கை அற்றவர்களாக வாழ்கிறார்கள்.

மதச்சுதந்திரம்

சுவிசின் அரசியலமைப்பு மதச்சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. ஓவ்வொருவரும் தமது சொந்த மதத்தை பேணவும் அதைப்பரப்பவும் உரிமையுள்ளது. எவரும் மதத்தில் இணைவதற்கும், மதசெயற்பாடுகளில் பங்கொடுக்கவும் நெருக்கடி கொடுக்கமுடியாது. மக்கள் ஒன்றாகக்கூடி தமது சமய வழிபாடுகளை கொண்டாட முடியும். எவரும் தமது மதம் அல்லது நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது.

மதமும் பாடசாலையும்.

கட்டாயப்பாடசாலை மதச்சார்பற்றது. அதன் அர்த்தம் சமயப்பாடம் படிப்பிற்பதில்லை என்பதல்ல .சமயப்பாடத்தில் இரு வகையுண்டு. இவையாவன : மதப்பிரிவுள்ள தேவாலய சமயபாடம் மற்றும் பாடசாலைச் சமயப்பாடம் "நன்நெறியும் மதங்களும் " இந்தப் பாடத்தில் அனைத்து மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட மதமும் நன்நெறியும் பற்றிய கேள்விகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இது ஆரம்பப்பாடசாலையிலும் 1ம் மேற்பிரிவிலும் கட்டாயப்பாடமாகும். மதப்பிரிவுள்ள தேவாலயச் சமயபாடத்திற்குப் போவது தன்னிச்சையானது. வேறு மதங்களைச் சார்ந்த பிள்ளைகளுக்குப் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மதச்சமூகங்கள் மூலம் தமது மதங்களைப் படிக்கலாம்.