மொழி

அறோ மாநில டொச் மொழி பேசத்தெரியாத குடியிருப்பாளர்கள் டொச் மொழியைக் கற்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. மொழி அறிவு உள்ள நிலை சமூக உள்வாங்கலுக்கும் தொழில் சந்தையில் வெற்றியையும் தேடித்தரும்.

உயர் டொச் மொழி / சுவிஸ் டொச் மொழி

சுவிஸில் 4 மொழிகள் பாவனையில் உள்ளன: டொச் ,பிரெஞ்ச், இத்தாலி, ரட் றோமானிஸ். அறோ மாநிலத்தின் அரசாங்க மொழி டொச் ஆகும். உயர் டொச் மொழிக்கும் (Hochdeutsch) சுவிஸ் டொச் மொழிக்கும் (Schweizerdeutsch) வித்தியாசம் உண்டு. பாடசாலையிலும் பகுதிவாரியாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒரு பகுதியும் எழுத்துடொச் மொழி பேசுவார்கள். எழுத்து மொழியும் உயர் டொச்மொழியாகும். ஆயினும் அன்றாடப் பேச்சு மொழி சுவிஸ் டொச் ஆகும். அங்கே டொச்சில்; ஒரு பேச்சு வழக்கு மொழியைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பேச்சு வழக்கு நன்றாக டொச் தெரிந்தவர்களுக்கே எல்லாம் விளங்கிக் கொள்வது கடினம். வெளிநாட்டவர்கள் சுவிஸ் டொச் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கப்படவில்லை ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அதை விளங்கிக் கொண்டாலே போதும். அதே வேளை சுவிஸ் மக்களை உயர் டொச் மொழி பேசச் சொல்லிக் கேட்கலாம்.

டொச் மொழியும் பிள்ளைகளும்

வேற்று மொழி பேசும் வெளிநாட்டவர்களின் பிள்ளைகளை இயலுமானவரை ஆரம்பம் தொட்டே டொச்மொழிபேசும் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள விடவேண்டும். இதற்காகவே விளையாட்டுக் குழுக்கள் அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான விசேட வசதிகள் உள்ளன. பிள்ளைகளுடன் அதிகம் பேசி அவர்கள் சொல்வதைக் கேட்டு கதைகள் சொல்வதன் மூலம் பெற்றோரும் பிள்ளைகளுக்கு உதவலாம். பெற்றோர் இலகுவாகப் பேசக்கூடிய மொழியிலேயே பிள்ளைகளுடன் பேசலாம்.

மொழிபெயர்ப்புக்கள்

சுவிசுக்கு வந்தவுடனேயே டொச் நன்றாகப் பேசவும் விளங்கவும் வேண்டுமென எதிர்பார்க்கபடமாட்டாது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் தன்னை விளங்க வைக்கவேண்டிய சந்தர்ப்பம் வரலாம். அநேகமான புதிதாக வந்தவர்கள் தமது உறவனர்களையோ அன்றி தெரிந்தவர்களையோ மொழிபெயர்க்கக் கூட்டிவரலாம். பிரச்சனையான தனிப்பட்ட நம்பிக்கையான பேச்சுவார்த்தைக்கு ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளரை வைப்பது நல்லது. கலாச்சார சிறப்பம்சங்களைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்ப்பதற்கு கலாச்சார மொழிபெயர்ப்பாளர்கள் விசேடதிறமை பெற்றுள்ளனர். கடிதங்களை விளங்கி எழுதிக்கொள்ளவும் மற்றும் விண்ணப்பங்களை நிரப்பிக் கொள்ளவும் எழுத்துச்சேவை (Schreibdienst) சுவிஸ் செஞ்சிலுவைச்சங்கத்தினால் (SRK) Aarau இலும் Baden இலும் உதவி செய்கிறது.