டொச்மொழி கற்றல்

டொச் சரியாகப் படிக்கவேண்டுமானால் ஒரு டொச் வகுப்புக்குப் போவது பரிந்துரை செய்யப்படுகிறது. அறோ மாநிலத்தில் டொச் வகுப்புகள் பல வகை வாழ்க்கைச் சூழ் நிலைகளிலும் பரந்து சீரமைக்கப்பட்டுள்ளது.

வசதி வாய்ப்புக்கள்

அறோ மாநிலத்தில் மொழி வகுப்புகள் வித்தியாசமான இலக்குகள் கொண்ட குழுக்களாக பல வழங்குநர்களால் நடத்தப்படுகின்றன. சில வழங்குநர்கள் வணிக நோக்கத்திற்காகவும் மற்றவை இலாபத்திற்காகவோ அல்லது மாநிலமளவிலோ நடத்தலாம். எவர் லத்தீன் எழுத்துக்களை எழுதத்தெரியாமல் இருக்கிறாரோ அல்லது எழுத வாசிக்கத் தடுமாறுகிறாரோ அவர் எழுத்துவகுப்புக்குப் Alphabetisierungskurs) போகலாம். வகுப்புக்குப் போக முன்பு வகுப்பின் தன்மை அதற்குரிய கட்டணம் பற்றி அறிந்திருக்கவேண்டும்.தாய்மார் தம் பிள்ளைகளுடன் போவதற்கென அதிகமான கிராமசபைகளில் நடத்தப்படும் விசேட வகுப்பு மூலம் தாய்மார் மட்டுமல்ல பிள்ளைகளும் கூட மொழியால் ஊக்குவிக்கப்படுகிறார்கள் (MuKi-Deutsch). இந்த வாய்ப்புகள் பற்றி அறோ ஒருங்கிணைப்புத் தொடக்க நிலையம் (Anlaufstelle Integration Aargau, AIA) அல்லது வதியும் கிராமசபை அறியத்தரும்.

மொழியின் தரம்

டொச் மொழியறிவின் ஒரு அளவுகோலாக ஐரோப்பிய குறிப்புச்சட்டகங்கள்" (GER)என வகுக்கப்படும். இதில் 6 அடுத்தடுத்த மொழியின் நிலைகள் A1(ஆரம்பம்) தொடக்கம் C2 (மிகவும் திறமையான மொழியறிவு )வரை உள்ளன. அதிகமான டொச்மொழி வகுப்புகள் இந்தப் படிகளிலே அமைக்கப்பட்டுள்ளன. நிலை A1 உம் A2 உம் டொச்மொழியின் அடிப்படை அறிவைக்காட்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி கற்க முயற்சி செய்ய விரும்பினால் அதிகமாக நிலை B1 உம் B2 உம் படித்திருக்கவேண்டும். C1உம் C2 படித்து மேம்பட்டவர்கள் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்கலாம்.

நிதி உதவி

டொச் வகுப்புக்கு வழமையாகத் தாமே பணம் செலுத்தவேண்டும். இதன் கட்டணங்கள் இடத்துக்கிடம் வித்தியாசப்படும். இதற்காக (ஒரு வகுப்பிற்குரிய கட்டணம்) ஒப்பிட்டுப் பார்ப்பது. பிரயோசனப்படும் ..சில வகுப்புகளுக்கு அறோ மாநிலம் அல்லது கிராமசபை நிதி உதவி செயவதால் படிப்பவர்களுக்கு மலிவாக முடியும்.