தொழில் இழப்பீட்டு நிலை

சகல தொழில்புரிவோரும்தொழில் இழப்பீட்டுக்கு எதிராக காப்புறுதிசெய்யப்பட்டுள்ளனர். எவர் தொழிலற்று இருக்கிறார்களோ அவர்கள் குறிப்பிட்ட காலம்வரைபணஉதவி பெறுவார்கள். வேலைஇழந்தோர் பிராந்திய தொழில் தரகர் நிலையத்தில் (RAV) பதியவேண்டும். இவை வேலைதேடுவதற்கு உதவும்.

வேலையிழந்தோர் காப்புறுதி

வேலையிழந்தோர் காப்புறுதி (ALV) ஒரு அரசநிறுவனம் மற்றும் அனைவருக்கும் கட்டாயமானது. இதற்கான மாதக்கட்டணம் சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்படும், வேலைகொடுப்போர் அரைவாசியை பொறுப்பேற்பர். சொந்தத்தொழில் புரிவோர் வேலையற்றோர் காப்புறுதியில் சேரமுடியாது. எவர் தொழில் இழக்கையில் வேலையற்றோர் இழப்பீட்டுச்செயலகத்திலிருந்து மாதசம்பளத்தின் பகுதியாக கிடைக்கும். (வேலைஇழப்புப்பணம், Arbeitslosengeld) எப்போது, எவ்வளவு வேலைஇழப்புப்பணம் கிடைப்பது வௌ;வேறு நிலைகளில் தங்கியுள்ளது. உதாரணமாக எவ்வளவு காலம் வேலை செய்துள்ளார் அல்லது என்ன காரணத்தால் வேலையற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பன..

வேலை இழப்பு நிலை நடைமுறை

எவர் வேலை இழந்தால் விரைவில் தன் வதிவிட பதிவலுவலகத்தில் அறிவிக்கவேண்டும். இறுதி வேலைநாளுக்கு முன் அறிவிப்பது மிகவும் நல்லது எனினும் பிந்தியது வேலையற்ற நிலையின் முதலாம் நாள். அதேசமயம் உடனடியாக பொறுப்பான பிரதேச தொழில் தரகர் நிலையத்திலும் (RAV) பதியவும். அங்கு தொடர்ந்து செய்யவேண்டிய நடைமுறைகள் வழங்கப்படும்.

பிரதேச தொழில் தரகர் நிலையம்

பிரதேச தொழில் தரகர் நிலையம் (RAV) விரைவில் ஒரு வேலையை பெறுவதற்கு உதவி செய்யும். ஒருவர் தொழில் இழப்பு பணம் பெறும் ஒருவர் RAV இல் உள்ள ஆலோசனை கலந்துரையாடலில் பங்குபற்றல் கட்டாயமானதாகும். RAV பயிற்சி வகுப்புகளையும் தொழிற்கல்வி நிகழ்வுகளையும் வழங்குகிறது. இவையும் பகுதிவாரியாக கட்டாயமானவை. சுவிசில் ஒருபோதும் வேலை செய்யாதவரும் தற்போது வேலை தேடுபவரும் RAV இல் பதியலாம். எனினும் அவர்களுக்கு பணம் கிடைக்காது.