வேலை கண்டுபிடித்தல்

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸில் வேலை இல்லாதவர்கள் குறைவு. இருந்தாலும் கூட வேலை தேடுபவர்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகளும் அதிகம். தேர்ச்சி அறிக்கைகள் டிப்ளோமா சான்றிதழ்கள் பெரிய அர்த்தம் கொடுக்கும். டொச் தெரிந்திருப்பது அதிகமான எல்லா வேலைகளுக்கும் எதிர்பார்க்கப்படும்.

தகைமைகள்

தொழில் கற்று முடித்திருத்தல் டிப்ளோமா அல்லது உயர் பயிற்சி பெறல் என்பன சுவிஸிலுள்ள அனைத்து வேலைகளுக்கும் ஒரு உயர்ந்த தகுதியாகக் கொள்ளப்படும். வெளிநாட்டு டிப்ளோமா எப்போதும் அங்கீகரிக்கப்படமாட்டாது. வேலை தேடும்போது முந்தைய வேலை வழங்கியவருடைய வேலைச்சான்றிதழ்; மிகவும் முக்கியம். அதிகமான வேலைகளுக்கு டொச் மொழித்திறன் அவசியம்.

வேலையிடம் கண்டுபிடித்தல்

வேலை காலியிடங்கள் பற்றி தினசரிப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் காணலாம். அதே நேரம் தனிப்பட்ட வேலைத் தரகர் காரியாலயங்களும் உள்ளன. சுவிஸில் தொலைபேசி மூலம் ஒரு நிறுவனத்திடம் விடுமுறை வேலை காலியாக உள்ளதா என விசாரிப்பது வழக்கமில்லை. அந்த நேரத்திற்கு அந்த நிறுவனத்தில் வேலை காலியிடம் இல்லாமல் இருப்பதும் சாத்தியப்படலாம். பொதுப் பிரதேச தொழில் தரகர் நிலையங்களும் (RAV) வேலை தேடுவதற்கு உதவிசெய்யும். அங்கே உள்ள கணினி மற்றும் தினசரிப்பத்திரிகைகள் இருப்பதுடன், வேலை தேடுவதற்கு அங்குள்ள பணியாளர்கள் அறிவுரை தருவார்கள்.

விண்ணப்பம்

சாதாரணமாக ஒரு வேலைக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பத்தில் குறைந்தது ஒரு வாழ்க்கைத் தரவு மற்றும் இலட்சியத்தபால் மற்றும் இயலுமாயின் முடிவுத் தேர்ச்சியறிக்கைகள் டிப்ளோமா மற்றும் வேலைச்சான்றிதழ்கள் என்பனவும் அடங்கும். வேலை வழங்குபவர் விண்ணப்பத்தில் அக்கறைப்பட்டால் ஒரு தனிப்பட்ட அறிமுகப் பேச்சுக்கு அழைக்கலாம் (Vorstellungsgespräch). விண்ணப்பத்தின் போதே அதிக இடங்களில் இதற்கு இலவசமான உதவி வழங்கப்படும்.