Cartons du Coeur - ஆர்காவ் மாநில உணவு உதவி
ஆர்காவ் மாநிலத்தில் உணவுத்தேவை இருக்கின்ற குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு ஆர்காவ் உணவு உதவி உணவு வழங்குகிறது. ஒவ்வொரு நபரின் தேவைகளையும் தீர்மானிக்க ஒரு தொலைபேசி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த உதவி இலவசம். இருப்பினும், இது நெருக்கடி சூழ்நிலைகளுக்கு உதவும் நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது, நிரந்தரமானதல்ல.
ப்ரோ செனெக்ட்டுட் ஆர்காவ்
ப்ரோ செனெக்ட்டுட் ஆர்காவின் சலுகைகள் மற்றும் சேவைகள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது. நிதிநிலை காரணங்களினால் யாராவது இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், ப்ரோ செனெக்ட்டுட் ஆர்காவ் தள்ளுபடி வழங்குகிறது.
சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் (SRK) ஆர்காவ் மாநிலம்
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் (SRK) ஆர்காவ் மாநிலம் பல்வேறு தள்ளுபடி சேவைகளை வழங்குகிறது. இவற்றில் செஞ்சிலுவைச் சங்கப் போக்குவரத்து சேவை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அவசரகால அழைப்பு ஆகியவை அடங்கும். டிமென்ஷியா உள்ளவர்களின் உறவினர்களுக்கு பல்வேறு நிவாரண சேவைகளும் உள்ளன. மேலும் பகல்நேர பராமரிப்பு மையம் மற்றும் பகல்நேர மையமும் உள்ளன.
டிஷ்லைன் டெக் டிஷ் (Tischlein deck' dich)
"டிஷ்லைன் டெக் டிஷ்" என்பது மீதமுள்ள உணவைச் சேகரித்து தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கிறது. உணவைப் பெற, ஒருஒருவருக்கு வாடிக்கையாளர் அட்டை தேவை. வாடிக்கையாளர் அட்டைகள் பல்வேறு சிறப்பு மற்றும் ஆலோசனை மையங்களில் கிடைக்கின்றன. டிஷ்லைன் டெக் டிஷ் வலைத்தளத்தில், அருகிலுள்ள உணவு விநியோக மையத்தைக் காணலாம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் அட்டையை எங்கு பெறலாம் என்பதையும் நீங்கள் கண்டறியலாம்.